
புத்ரா ஜெயா, மே 2 – இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிலாளர்களும் குறைந்த பட்ட சம்பள அமலாக்கத்தில் நன்மை அடைவதை உறுதிப்படுத்த அந்த சம்பள அமலாக்கத்தின் வழிமுறை குறித்து ஆராயப்படுவதாக மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச சம்பளமான 1,500 ரிங்கிட்டை தொழிலாளர்கள் பெறுவது மிகவும் குறைவாகும். தொழிலாளர்கள் தங்களது தொழில் திறனுக்கு ஏற்பட சம்பளம் பெறுவதையும் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என சிவக்குமார் கேட்டுக்கொண்டார். விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த சம்பள திட்டம் குறித்து தாம் பரிந்துரைக்கப் போவதாக சிவகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் தொழிற்சங்கங்களுக்கு உரிய அங்கீகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் சட்டங்களிலும் திருத்தங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். இந்நாட்டில் . தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அதேவேளையில் ஈபிஎஃப் சந்தாவை 20 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கைகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.