கொழும்பு, மே 5 – மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு இம்மாதம் முதல் சிறப்பு உதவித் தொகையை இலங்கை அரசாங்கம் வழங்கவிருக்கிறது. இதனை அந்நாட்டின் ஊடக அமைச்சர் Nalaka Godahewa தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கியுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். எனவே அவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக Nalaka Godahewa கூறினார். உலகப் பொருளகம் வழங்கிய அவசர கடனுதவி திட்டத்தின் கீழ் மக்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்குவதற்கு அமைச்சரவை முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.