குளிர்கால ஒலிம்பிக் முடியும்வரை படையெடுப்பை நிறுத்தும்படி சீனா கேட்டுக்கொண்டதா?
வாஷிங்டன், மார்ச் 3 – பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடிவுறும்வரை உக்ரைய்ன் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும்படி ரஷ்ய அதிகாரிகளை சீனா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய உளவு தகவல்களை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் Vladimir Putin உக்ரைய்ன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததை சீன உயர் அதிகாரிகள் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவேதான் குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடிவடையும்வரை தாக்குதலை நிறுத்திவைக்கும்படி சீனாவிடம் ரஷ்யா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் சீனாவுக்கு வருகை மேற்கொண்டார்.
எனினும் அப்போது உக்ரைய்ன் மீதான தாக்குதல் தொடர்பாக சீன அதிபர் XI Jinping கும் அதிபர் Vlamidar Putin னும் விவாதித்தனரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.