லிப்பிஸ், மார்ச் 7 – தமது வீட்டில் சமையல் அறையில் சுத்தம் செய்த பெண்மணி ஒருவர் குளிர் சாதனப் பெட்டிக்கு கீழே இருப்பது கயிறு என்று தொடக்கத்தில் தாம் நினைத்தாகவும் ஆனால் அலமாரிக்கு அடியில் ஊர்ந்து சென்றபோதுதான் அது ஒரு பாம்பு என தெரியவந்ததாக 40 வயதுடைய Hirwani Azman தெரிவித்தார்.
உடனடியாக பொது தற்காப்பு படையினருக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன். பிறகுதான் தமது வீட்டிற்குள் இருந்தது நாகப்பாம்பு என்று தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தாக உணவு விநியோகிப்பாளரான அவர் கூறினார். நண்பகல் மணி 12.20 க்கு தொலைபேசி அழைப்பு கிடைத்தவுடன் உடனடியாக ஐவர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து 0.5 கிலோ எடையுள்ள அந்த நாகத்தை பிடித்ததாக லிப்பிஸ் மாவட்ட பொது தற்காப்புத்துறையின் அதிகாரி Mohamad Azhar Yusof கூறினார்.