Latestமலேசியா

குளுவாங்கிலுள்ள பொது கழிப்பறையில் மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு முயற்சியிலிருந்து 24 வயது பெண் தப்பினார்

குளுவாங், டிச 17 – குளுவாங் Laman Kampung Melayu விலுள்ள பொது கழிப்பறையில் தம்மை கற்பழிக்க முயன்ற ஆடவனின் கையை கடித்தும் முகத்தில் பிராண்டியும் 24 வயது பெண் ஒருவர் தப்பினார். அந்த பெண் தப்பி வந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை மணி 5.20 அளவில் சந்தேக நபர் பொதுமக்களின் உதவியோடு கைது செய்யப்பட்டான்.

அந்த பெண் கழிவறைக்குள் நுழைந்தவுடன் அங்கு ஒளிந்திருந்த காமுகன் கழிவறை கதவை பூட்டிய பின் அப்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளான். எனினும் அந்த ஆடவனிமிருந்து அப்பெண் கடுமையாக போராடி தப்பியோடியதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் பஹ்ரெய்ன் முகமட் நோர் (Bahrin Mohd Noh ) தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட வேலையில்லாத 34 வயதுடைய அந்த ஆடவன் ஆறு குற்றச்செயல் பின்னணியைக் கொண்டிருந்ததாகவும் அவற்றில் மூன்று குற்றங்கள் போதைப் பொருள் தொடர்பானவ என கூறிப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு முன் அந்த சந்தேகப் பேர்வழியை பொதுமக்கள் தடுத்துவைத்திருந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!