குளுவாங், மே-5 – ஜொகூர், குளுவாங்கில் ஆடவர் கும்பலொன்று அபாயகரமான ஆயுதங்களால் தாக்கியதில் 30 வயது ஆடவர் படுகாயமடைந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு Taman Lien Seng-கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து சனிக்கிழமையன்று 20 முதல் 30 வயதிலான 3 சந்தேக நபர்களை போலீஸ் கைதுச் செய்தது.
அவர்கள் அனைவரும் Jalan Ladang Nenas Simpang Renggam மற்றும் Iskandar Puteri-யில் வைத்துக் கைதுச் செய்யப்பட்டனர்.
இரும்புக் கம்பி, மற்றும் மோட்டார் பட்டறையில் பயன்படுத்தப்படும் கருவிகளால் தாக்கப்பட்டதில், சம்பந்தப்பட்ட ஆடவருக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.
அதோடு, அவரின் தாடை உடைந்து, வலது கணுக்காலும் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அத்தாக்குதல் சம்பவத்தைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரித்து வரும் போலீஸ், தப்பியோடிய மேலும் சிலரை தேடி வருகிறது.
முன்னதாக அக்கும்பல் அவ்வாடவரைச் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய சில காணொலிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.