Latestமலேசியா

குளுவாங்கில் டிரேய்லர் லாரி மோதி காட்டு யானை பலி

குளுவாங், செப்டம்பர் -6, ஜோகூர், குளுவாங், கம்போங் காஜாவில் நேற்றிரவு டிரேய்லர் லாரி மோதி ஆண் யானை உயிரிழந்தது.

Jalan Sri Timur-ரில் இரவு 10.45 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 53 வயது டிரேய்லர் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

மெர்சிங்கில் இருந்து கஹாங் தீமோர் நோக்கி டிரேய்லர் வந்து கொண்டிருந்தது.

அப்போது இடப்பக்கச் சாலையிலிருந்து திடுதிப்பென அந்த காட்டு யானை சாலையைக் கடந்ததால், லாரியால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டு போனது.

ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையான PERHILITAN உதவியுடன் யானையின் சடலம் அப்புறப்படுத்தப்பட்டது.

வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விபத்தை ஏற்படுத்தியன் பேரில் டிரேய்லர் ஓட்டுநர் விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!