Latestமலேசியா

குளுவாங்கில் வெடிகுண்டை அழிக்கும் போது மண்ணில் புதையுண்டு படுகாயமடைந்த 2 போலீஸ்காரர்கள்

குளுவாங், ஆகஸ்ட்-28 – ஜோகூர் குளுவாங்கில் வெடிகுண்டை அழிக்கும் பணியின் போது மண்ணில் புதையுண்டு இரு போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.

Taman Sri Lambak, Jalan Tabah-வில் உள்ள வீடமைப்புக் கட்டுமானத்தளத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு அழிக்கும் பிரிவைச் சேர்ந்த இருவரும் முறையே Koperal Abd Halim Zainal மற்றும் Koperal Muhammad Faruuqi Shamsary என அடையாளம் கூறப்பட்டனர்.

இருவருக்கும் உடலில் பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டை அழிப்பதற்காக குழியைத் தோண்டிய போது, குழியின் மண் சுவர் திடீரென சரிந்தது.

இதனால் இருவருமே மண்ணில் புதையுண்டனர்.

அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார், மேற்கொண்டு கருத்துரைக்க மறுத்து விட்டார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிக்குள் அம்புலன்ஸ் வண்டி வந்த வீடியோ முன்னதாக வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!