கோலாலம்பூர், பிப் 7 – மறைந்த முன்னாள் அனைத்துலக காற்பந்து விளையாட்டாளர் செர்பகத் சிங்கின் பெரை குளுவாங் விளையாட்டரங்கத்திற்கு சூட்டும் அனைத்துலக இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. செர்பி என்றழைக்கப்படும் செர்பகத் சிங் குளுவாங்கில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அனைத்துலக விளையாட்டாளர்களும் மற்றும் செர்பியின் நண்பர்களும் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய ஆட்டக்காரரான செர்பி ஜனவரி 12 ஆம் தேதி காலமானார்.
தேசிய ரீதியில் மட்டுமின்றி குளுவாங் வட்டாரத்திலும் காற்பந்து வளர்ச்சிக்கு செர்பி அளப்பரிய பங்கை ஆற்றி வந்துள்ளார். காற்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர் இலவச பயிற்சியையும் வழங்கியுள்ளார் என காற்பந்து விளையாட்டாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான BOB எனப்படும் G. Vivegandram தெரிவித்தார். முன்னாள் அனைத்துலக விளையாட்டாளர்களுக்கும், குளுவாங் All Star குழுவிற்குமிடையே மார்ச் 19 ஆம்தேதி நடைபெறும் ஆட்டத்தின்போது குளுவாங் விளையாட்டரங்கிற்கு செர்பி பெயரை வைக்கும் பிரச்சாரம் தொடங்கப்படும் என BOB தெரிவித்தார்.
ஷெர்பியுடன் விளையாடியிருக்கும் முன்னாள் அனைத்துலக ஆட்டக்காரர்களான களான சிங்கப்பூரின் Fandi Ahmad, V.Sundramoothy, Malek Awab , K. Ravichandran, A. Rukkumaran ,Dollah Saleh உட்பட பல ஆட்டக்காரர்கள் இந்த நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர்.