![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/razarudin-IGP_20240924091224_bernama_1.jpg)
கோலாலம்பூர், செப்டம்பர் -29 – குளோபல் இக்வான் நிறுவனத்தின் பிரச்னைக்குரிய உறுப்பினர்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போதனை மையங்கள் இயங்கி வருவதாகக் கூறப்படுவதை போலீஸ் விசாரித்து வரூகிறது.
அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்யவும், அந்த தனிமைப்படுத்தல் மையங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razaruddin Husain) உறுதிப்படுத்தினார்.
Facebook Pusat Kajian Ajaran Sesat அல்லது PUKAS என்ற முகநூல் பக்கத்தில் முன்னதாக அக்குற்றச்சாட்டு பகிரப்பட்டது.
தடை செய்யப்பட்ட அல்-அர்க்காம் (Al-Arqam) மற்றும் ருஃபாகா (Rufaqa) இயக்கத்தின் நிறுவனர் அபுயா அஷாரி (Abuya Ashaari) முன்பு அறிமுகப்படுத்திய முறையைப் பின்பற்றி, அந்த தனிமைப்படுத்தல் மையங்கள் இயங்கி வருவதாக PUKAS குற்றஞ்சாட்டியது.
பிரச்னைக்குரிய உறுப்பினர்கள் அம்மையங்களில் உள்ள சிறு சிறு அறைகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, மற்றவருடன் உரையாட கூட தடை விதிக்கப்பட்டு வந்துள்ளது.
அவர்கள் தங்களைத் தாங்களே சுய பிரதிபலிப்பு (self-reflection) செய்துகொள்ளவும், ‘திருந்துவதற்கும்’ அம்முறை கடைப்பிடிக்கப்படுவதாக PUKAS கூறியிருந்தது.
சிறார் இல்லத் துன்புறுத்தல் தொடங்கி, வரி ஏய்ப்பு வரை குளோபல் இக்வான் ‘லீலைகள்’ அம்பமானதிலிலிருந்து, அதன் மேல்மட்ட நிர்வாகிகள் உட்பட 300-கும் மேற்பட்டோர் இதுவரை கைதாகியுள்ளனர்.
அதேசமயய் 572 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.