Latestமலேசியா

குளோபல் இக்வான் நடவடிக்கைகளை போலீஸ் பாதுகாக்கிறதா? அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்கிறார் IGP

கோலாலம்பூர், செப்டம்பர்-25 – குளோபல் இக்வான் நிறுவனத்தின் நடவடிக்கைகளை உள்ளுக்குள் இருந்துகொண்டே போலீஸ் பாதுகாத்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் மறுத்துள்ளார்.

அதுவோர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பதோடு, தீய நோக்கத்தைக் கொண்டதென தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razaruddin Husain) கூறினார்.

குளோபல் இக்வான் நிறுவனம் மீதான விசாரணையை வெளிப்படையாகவும், நியாயமாகவும், விரிவாகவும் மேற்கொண்டு வருகிறோம்.

தவறிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த போலீசுக்கு போதுமான காலமும் இடமும் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

போலீஸ் படையின் முன்னாள் மூத்த உயரதிகாரி ஒருவருக்கும், குளோபல் இக்வான் நிறுவனத்தின் தலைமைக்கும் நெருங்கியத் தொடர்பிருப்பதாக நேற்று வதந்தி வைரலானது.

அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

அந்த முன்னாள் உயரதிகாரிக்கும் இன்னாள் உயரதிகாரிகளுக்கும் நல்ல உறவு உள்ளது.

அண்மையில் குளோபல் இக்வான் நிறுவனத்துக்குச் சொந்தமான பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தோல்வியில் முடிந்தன; அதற்கு காரணம் போலீசின் நடவடிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அவ்விடங்கள் காலி செய்யப்பட்டு விட்டன.

ஆக உள்ளடி வேலைகள் நடப்பதாக அந்த வைரல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டது.

இதற்கு முன் விசாரணையில் எல்லை மீறுகிறோம் என்றார்கள், இப்போது பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இரண்டில் எது தான் உண்மையென IGP கேட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!