Latestமலேசியா

குளோபல் இக்வான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் அதிரடி கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 19 – சமூக நல இல்ல துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் குளோபல் இக்வான் நிறுவனத்தின் தலைவர் நசிருடீன் அலி (Nasiruddin Ali), அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட உயர் மட்ட நிர்வாகத்தின் உறுப்பினர்கள் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பல இடங்களில் நடத்திய சோதனைகளில் 19 பேர் வரை பிடித்திருக்கின்றனர்.

இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய தேசிய போலிஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின், இது குறித்து விரைவில் மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் அச்சமூக நலத்தில் மூன்று சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது முதல் 22 வயதிலான மூவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், அக்குற்றச்சாட்டை, மூவரும் மறுத்து விசாரணைக் கோரினர்.

இதனிடையே, 12,000 ரிங்கிட் ஜாமின் தொகையுடன் கூடுதல் நிபத்துனைகளுடன் அம்மூவரையும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!