குழந்தைகள் விளையாடும் படுக்கையுடன் கூடிய தொட்டிலை சலவை இயந்திரத்தில் போட்ட தம்பதியர்

சிங்கப்பூர், செப் 13 – சிங்கப்பூரில் ஒரு தம்பதியர் குழந்தைகள் விளையாடும் படுக்கையுடன் கூடிய தொட்டில் அல்லது பிலேபென் (PlayPen) னை தூய்மைப்படுத்துவதற்கு அதனை சலவை இயந்திரத்தில் போட்டதால் அந்த இயந்திரம் பெரிய அளவில் வெடித்ததால் அதிலிருந்து கண்ணாடிகளும் மற்றும் சலவைகளும் பல இடங்களில் சிதறின. பல்வேறு சலவை இயந்திரங்களைக் கொண்ட சலவை கடையில் திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தம் பலரைத் திடுக்கிடச் செய்தது. அந்த சம்பவம் திகில் நிறைந்த திரைப்படத்தை நினைவுபடுத்தியதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த சம்பவத்தை பார்த்த அதிர்ச்சியிலிருந்து தம்மால் இன்னும் மீளமுடியவில்லையென அவர் கூறினார்.
முதலில் அந்த தம்பதியர் குழந்தைக்கான ஸ்ட்ரோலரை (Stroller) சலவை இயந்திரத்தில் போட்டிருப்பார்கள் என பலர் நினைத்தனர். அந்த ஸ்ட்ரோலரின் டயர்கள் வெளியே தெரிந்ததால் அப்படி நினைக்கத் தோன்றியது. சலவை இயந்திரத்தில் அதனை போடக்கூடாது சம்பந்தப்பட்ட பெண்மணியை பலர் எச்சரித்தனர். பிறகுதான் தெரிந்தது அந்த பெண் சலவை இயந்திரத்தில் பிலேபென்னை போட்டிருக்கிறார் என்று தெரிந்தும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். அந்த பெண்ணும் அவரது கணவரும் ஆங்கிலத்தில் நன்றாக பேசினர். ஆனால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஒரு பொருளை சலவை இயந்திரத்தில் போடுவதால் ஏற்படும் விளைவை மற்றும் அதன் ஆபத்தைக்கூட அவர்கள் உணராமல் செயல்பட்டதுதான் வியப்பாக இருந்ததாக அச்சம்பவத்தை நேரில் பார்த்த பலர் தெரிவித்தனர். அந்த சலவை இயந்திரத்தின் கண்ணாடி பல பாகங்களாக உடைந்து வெளியே பறந்து விழுந்தது. நல்லவேளை அந்த கண்ணாடி துண்டுகளால் எவரும் காயம் அடையவில்லை