
கோலாலம்பூர், ஆக 6 – குழந்தைக்கு ‘vape’ கொடுத்த ஆடவனின் செயலால் வலைத்தளவாசிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். 15 விநாடி கொண்ட காணொளி ஒன்று இன்ஸ்தாகிராம் மற்றும் டுவிட்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதனை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பொது இடத்தில், தனது மடியில் அக்குழந்தை படுத்திருக்க, அவ்வாடவன், குழந்தையின் வாயில் வேப்பை மூன்று முறை புகட்டுகிறான்.
இதனைப் பார்த்து கோபமடைந்த வலைத்தளவாசிகள் கோபத்தில் அவ்வாடவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.