Latestமலேசியா

குழந்தையைக் கடத்தியதாக பதின்ம வயது பெண் மீதும் காதலர் மீதும் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட் 30- 9 மாத பெண் குழந்தையைக் கடத்தியதாக இளம் பெண் ஒருவர் மீதும் அவரது காதலர் மீதும் புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam) மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அக்குற்றச்சாட்டை அந்த 14 வயது பெண்ணும் அவரது 18 வயது காதலரும் மறுத்துள்ளனர். அவ்விருவரும் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி செபெராங் பெராய் தெஙா (Seberang Perai Tengah), தாமான் பாவ் பெராய் (Taman Pauh Perai) எனுமிடத்திலுள்ள அடுக்குமாடி வீட்டில் இருந்து குழந்தையைக் கடத்திச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்டிருந்த அக்குழந்தையை, அப்பராமரிப்பாளரின் பேத்தி கடத்திச் சென்றார். பின்னர் குழந்தையின் தாய் கொடுத்திருந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அவ்விருவரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். தனது சொந்த பிள்ளையைப் போல் வளர்ப்பதற்காகக் குழந்தையைக் கடத்தியதாக, போலீஸ் விசாரணையின் போது அப்பெண் கூறியிருந்தார்.

இவ்வழக்கு அக்டோபர் 3ஆம் தேதி மறுசெவிமடுப்புக்கு வரும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தலா ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!