
கோலாலம்பூர், மே 16 – ஒரு குழந்தையை கண்ணும் கருத்துமாய் பெற்றெடுப்பவள் தாய்தான் என்றாலும், அவர்களை கல்வி என்ற உளி கொண்டு சித்திரமாய் செதுக்கி, இந்த உலகத்திற்கு ஒரு சிறந்த மனிதற்குரிய கல்வி அறிவைத் தருபவர் ஆசிரியர் பெருமக்கள் என்றால் அது மிகையன்று.
இத்தகையப் பெருமை வாய்ந்த ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வவதாக மதிப்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எம். விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மாணவர்களின் வளர்ச்சிக்காக கடினமான பணிகளை மேற்கொள்வதோடு, மாணவர்களின் ஒழுக்கம் – தன்னம்பிக்கை – பண்பு – நேர்மறையான சிந்தனைகளை உட்புகுத்துதல் போன்றவற்றினை மாணவர்களுக்கு வழங்குவது ஆசிரியர்களின் திறன் மிகுந்த பணியாகும். இவர்களின் உழைப்பினை எப்போதும் மனத்தினில் நிறுத்தி, மாணவர்களுக்கான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்குபவர்களை என்றும் மரியாதைக்குரியவர்களாகப் அனைவரும் போற்ற வேண்டும்.
இன்றையச் சூழ்நிலையில் மாணவர்களின் தாய் மொழிக் கல்வியில் பல பிரச்சினைகள் தலைதூக்கி இருந்தாலும், அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்ப மஇகா அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்று ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து பெருமக்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மஇகாவின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.