கெமமான், பிப் 15 – தான் பிரசவித்த ஆண் குழந்தையை கொன்றதாக பதின்ம வயது பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இம்மாதம் 8ஆம் தேதி காலை 7 மணிக்கும் 9 மணிக்குமிடையே Seri Bandi யிலுள்ள ஒரு வீட்டில் அந்த குழந்தையை கொலை செய்ததாக 15 வயதுடைய பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கொலைக் குற்றச்சாட்டு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்திற்குட்பட்டதாக இருப்பதால் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வழக்கு மீண்டும் மார்ச் 16ஆம் தேதி மறுசெவிமடுப்புக்கு வரும் என மாஜிஸ்திரேட் Tengku Eliana Tuan Kaaruzaman நிர்ணயித்தார்.