
கோம்பாக், ஜூ 3 – குழந்தை பராமரிப்பு மையத்தில் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்படும் காணொலி வைரலானதைத் தொடர்ந்து 23 வயது பெண் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்டிருந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு பத்து கேவ்ஸ், தாமான் சமுத்திராவில் உள்ள அந்த பராமரிப்பு மையம் மீது போலிஸ் புகார் செய்யப்பட்டது.
அந்த காணொலியில், அக்குழந்தை தொடர்ந்து தாக்கப்படுவதோடு, தலையணை வைத்தும் நசுக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது அவருக்கு எதிரான குற்றம் நிறுபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 10,000 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அதே சமயத்தில் அப்பெண் 3 வருட கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளார்.
உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த அந்த மையத்தின் மீது 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.