
நியூ யார்க் சிட்டி, ஜூன் 30 – அமெரிக்காவில் துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி நடைபெற்றுவரும் குற்றச்செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகக்கடைசியாக நியூ யார்க் சிட்டி நகரிலுள்ள தெருவில் வண்டியில் தமது குழந்தையை அமரவைத்து தள்ளிச்சென்றுக் கொண்டிருந்த 20 வயது பெண்ணின் தலையில் ஆடவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான் . தலையில் கடுமையாக காயம் அடைந்த அந்த பெண் உடடினயாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு இறந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அந்த சம்பவத்தின்போது அப்பெண்ணின் குழந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான விசாரணை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.