
கோலாலம்பூர், ஜன 28 – கோலாலம்பூர், Bandar Baru Bangi- யில் , taska- குழந்தை பராமரிப்பு மையத்தின் கண்காணிப்பில் இருந்தபோது , 3 மாத ஆண் குழந்தை இறந்தது.
அந்த மையத்தின் பணியாளரால் சுயநினைவற்ற நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த கைகுழந்தை , சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, Kajang மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Zaid Hassan தெரிவித்தார்.
தொடக்க விசாரணையில், அச்சம்பவத்தில் வன்செயலுக்கான எந்த அம்சமும் இல்லையென தெரிய வந்திருக்கிறது. ஆனால் குழந்தையின் மரணத்திற்கு கவனக்குறைவு காரணமாக இருந்திருக்கலாமென Mohd Zaid குறிப்பிட்டார்.