Latestமலேசியா

குழந்தை மரணம் ; மருத்துவமனைக்கு எதிராக பெற்றோர் சட்ட நடவடிக்கை

கோத்தா பாரு , பிப் 24 – தங்களது இரு மாத குழந்தை இறந்தது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெற்றோர் Raja Perempuan Zainab 11 மருத்துவமனையின் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளனர்.

சிகிச்சையளிப்பதில் அந்த மருத்துவமனை கவனக் குறைவாக நடந்துக் கொண்டிருப்பதாக, அக்குழந்தையின் தாயாரான 26 வயது ரொசிலாவாத்தி இஸ்மாயில் ( Rosilawati Ismail ) தெரிவித்தார்.

குழந்தைக்கு காலாவதியாகவிருக்கும் பால்மாவை கொடுத்தது, ஐந்து நாட்களுக்கு விரதம் இருக்கும்படி கட்டாயப்படுத்தியது, அனுமதியின்றி தூக்கமாத்திரை கொடுத்தது என சிகிச்சை முறையில் கவனக் குறைவுகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

கடுமையான வயிற்றுப் போக்கினால் தனியார் மருத்துவமனைக்கு தங்களது குழந்தையை எடுத்துச் சென்ற நிலையில், அந்த தனியார் மருத்துவமனை அவர்களது குழந்தையை Raja Perempuan Zainab 11 மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. அக்குழந்தை 13 தினங்களுக்குப் பின் இறந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!