கோலாலம்பூர், ஆகஸ்ட்-13, டிக் டோக்கிலும் குழு உரையாடல் (group chat) வசதி ஏற்படுத்தப்படவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அப்புதிய வசதியின் படி, 32 பயனர்கள் இனி ஒரே நேரத்தில் குழுவாக உரையாடலாம்.
அக்குழு உரையாடல் மூலம் பயனர்கள் வீடியோக்களை இனி எளிதாகப் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பேற்படும்.
எனினும் ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 15 வயதுக்கு கீழ்பட்ட டிக் டோக் பயனர்களுக்கு இப்புதிய வசதி வழங்கப்படாது.
மற்ற பதின்ம வயதினரோ, தங்களுக்கு அறிமுகமானவர்கள் அழைப்பு விடுத்தால் மட்டுமே அவர்களால் குழுவில் சேர முடியும்.
குழுவில் சேரும் விருப்பத்தை manual முறையிலும் அவர்கள் உறுதிச் செய்ய வேண்டும்.
குழு உரையாடலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சொற்களை வடிகட்டுவது, பயனர்களை mute-டில் வைப்பது போன்ற கூடுதல் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வேளையில், நேரடி குறுஞ்செய்தியில் (Direct Message) ஸ்டிக்கர் முறையும் அறிமுகம் கண்டுள்ளது.
ஸ்டிகர் மூலம், செய்தியை மேலும் தெளிவாகவும் எளிதாகவும் மற்றவரிடத்தில் அனுப்ப முடியுமென டிக் டோக் கூறியது.