Latestமலேசியா

குழு ரீதியிலான ஆசிய பேட்மிண்டன் போட்டி ஜப்பானை வீழ்த்த மலேசியா கங்கணம்

ஷா அலாம், பிப் 18 – குழு ரீதியிலான ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மலேசிய ஆண்கள் ஜப்பானை வீழ்த்த முடியும் என தேசிய பேட்மிண்டன் குழுவின் இரட்டையர் பிரிவு பயிற்சியாளரான Rexy Mainaky நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய குழுவினருக்கு இருந்து வரும் பரந்த அனுபவத்தின் அடிப்படையில் தாம் இந்த நம்பிக்கையை கொண்டிருப்பதாக அவர் கூறினார். தொடக்க ஆட்டத்தில் மலேசிய குழுவினர் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூரையும் நேற்றைய ஆட்டத்தில் 5 -0 என்ற ஆட்டக்கணக்கில் கஸகஸ்தான் (Kazakhstan) குழுவையும் வீழ்த்தியுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் Lee Zii Jia முதல் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று மலேசியாவுக்கு நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தித் தருவார் என Rexy Mainaky தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!