குவந்தான், ஆக 15 – குவந்தான் Indera Mahkota -விலுள்ள தனது வீட்டில் காணாமல்போனதாக புகார் செய்யப்பட்ட குடும்ப மாது ஒருவர் தனது வீட்டின் தூங்கும் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அந்த பெண்ணின் சடலத்தை அவரது மாமியார் நேற்றிரவு மணி 7.30 அளவில் கண்டுப்பிடித்தார். அவ்வீட்டில் தனது கணவரான சீன பிரஜையுடன் , மூன்று வயது ஆண் குந்தை மற்றும் மைத்துனியுடன் அப்பெண் தங்கியிருந்தார். புதன்கிழமையன்று அப்பெண் காணாமல் போனதாக மாலை மணி 3.25 அளவில் அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
அன்றைய தினம் காலை மணி 8.30 அளவில் Whatsapp மூலம் தனது மகளுடன் ஆகக்கடைசியாக தொடர்பு கொண்டதாக வர்ததகரான அவரது தந்தை தெரிவித்தார். அதன் பிறகு இரவு மணி 7.20 அளவில் வீட்டின் படுக்கை அறையில் அப்பெண் சுயநினைவின்றி , கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளத்துடன் இறந்து கிடந்ததாக அவரது கணவர் தெரிவித்தார் என குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் முகமட் ஸஹாரி ( Wan mohd zahari ) கூறினார்.