குவந்தான், செப்டம்பர் 13 – பணமோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றவியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வந்த அழைப்பை நம்பி, குவந்தானைச் சேர்ந்த 34 வயது பெண் RM136,700 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
வணிகரான அப்பெண்ணுக்கு BNM எனும் போலியான தேசிய வங்கி இணைப்பு ஒன்றை வழங்கி பதிவிறக்கம் செய்து வங்கி சேமிப்பு குறித்துப் பதிவு செய்யுமாறு பணித்துள்ளனர் அந்த மோசடிகாரர்கள்.
அதன்பின்னர், விசாரணைக்காக என நாடகம் அரங்கேற்றி, பணப்பட்டுவாடா வங்கியின் வழி பணத்தை 2 வங்கி எண்களுக்குச் செலுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த போலி போஸ்காரரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில்தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.