குவந்தான், ஆக 3 – இன்று பெக்கான் கமபூங் கெடெபங் ஹிலிர்ரில் (Kampung Ketepang Hilir) டிரெய்லர் லோரி ஒரு வீட்டில் மோதியதைத் தொடர்ந்து அந்த வீடு இடிந்ததில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். இன்று விடியற்காலை மணி 4.46 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குனர் இஸ்மாயில் அப்துல் கனி தெரிவித்தார். அந்த விபத்தில் டிரெய்லர் லோரியின் உதவியாளர் மற்றும் மேலும் இதர மூன்று தனிப்பட்ட நபர்களும் காயம் அடைந்தனர்.
பல்வேறு சரக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற அந்த லோரி பிரேக் செயல் இழந்து வீட்டை மோதியபின் அவ்வீட்டின் அறைக்குள் புகுந்தது. வீடி இடிந்ததைத் தொடர்ந்து லோரியின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் மரணம் அடைந்தார். லோரி ஓட்டுனர் உட்பட மூவர் சிகிக்சைக்காக பெக்கான் மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.