குவாந்தான், ஜனவரி-8, பஹாங், குவாந்தானில் ஒரு வீட்டுக்கு வழி கேட்கும் தோரணையில் இல்லத்தரசியை நெருங்கிய 3 பெண்கள், அவரிடமிருந்து 137,500 ரிங்கிட் மதிப்பிலான சேமிப்புப் பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.
ஏதோ மந்திர தந்திரத்தை செய்து அம்மூவரும் தன்னை ‘மயக்கி’ விட்டதாக பாதிக்கப்பட்ட 57 வயது அம்மாது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
அதனால் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அம்மூவரையும் வீட்டுக்குள் அவர் அழைத்துச் சென்றிருக்கின்றார்.
அவர்கள் கேட்ட முகவரி தமக்குத் தெரியாது எனக் கூறியதும், நகைகளையும் சேமிப்புப் பணத்தை எடுத்து வந்து தருமாறு அவர்கள் கேட்டார்களாம்.
இவரும் உடனே உள்ளே சென்று கேட்ட அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்து விட்டதாக நேற்று போலீஸில் புகார் செய்துள்ளார்.
அவ்விவகாரம் விசாரிக்கப்படுவதாக பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹாயா ஒத்மான் கூறினார்.