குவாந்தான், அக்டோபர் 4 – குவாந்தானில் ஆடவர் ஒருவர் 12 வயது சிறுவனை முட்கரண்டியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மன அழுத்தத்தில் இருப்பதைச் சந்தேகிப்பதாக மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் முகமட் ஐஹாரி (Wan Mohd Zahari) கூறியுள்ளார்.
இந்நிலையில், கழுத்தில் சிறு காயங்களுடன் சிறுவன் உட்பட அந்த ஆடவரும், தெங்கு அம்புவான் அப்சான் (Tengku Ampuan Afzan) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.