குவலா கிராய், ஆகஸ்ட்-30 – கிளந்தான், குவாலா கிராய், கம்போங் மஞ்சோரில் விரைவுப் பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
ஜாலான் கோத்தா பாரு – குவா மூசாங் சாலையின் 95-வது கிலோ மீட்டரில் நேற்று நள்ளிரவு அவ்விபத்து நிகழ்ந்தது.
அதில் படுகாயமடைந்த 19 வயது மொஹமட் நஸ்ருல் ஷா சகாரி (Mohamad Nazrul Shah Sakari) சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காது மரணமுற்றார்.
சம்பவத்தின் போது குவா மூசாங்கில் இருந்து குவாலா கிராய் வந்து கொண்டிருந்த நஸ்ருல், முன்னே சென்றக் காரை முந்திச் செல்ல முயன்ற போது, கோத்தா பாருவிலிருந்து கோலாலம்பூர் வந்து கோண்டிருந்த விரைவுப் பேருந்தை மோதியுள்ளார்.
பேருந்து ஓட்டுநருக்கு அதில் காயம் ஏதும் ஏற்படவில்லை.
அவ்விபத்து 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக போலீஸ் கூறியது.