குவாலா கிராய், அக்டோபர்-14, கிளந்தான், குவாலா கிராய் பெரிய சந்தையின் மேல்மாடி இன்று அதிகாலை தீயில் அழிந்தது.
தீயணைப்பு வண்டி வருவதற்குள் முதல் மாடியின் 80 விழுக்காட்டுக் கடைகள் சேதமடைந்து விட்டன.
நல்லவேளையாக யாரும் தீயில் சிக்கவில்லை.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதில் கீழ்மாடிக்கு பரவுவதற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்படுவதோடு சேத விவரங்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.