Latestமலேசியா

குவாலா குபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மாமன்னரின் புகைப்படங்களைப் பயன்படுத்திய இருவர் கைது

குவாலா குபு பாரு, மே-6 – குவாலா குபு பாரு (KKB) சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கான போஸ்டராகவும் ஸ்டிக்கராகவும் மாமன்னரின் புகைப்படங்களைப் பயன்படுத்தியதன் பேரில், உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ahmad Faizal Tahrim அதனை உறுதிப்படுத்தினார்.

தேர்தல் குற்றங்கள் சட்டம் மற்றும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் 3 நாட்களுக்கு அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரில் ஒருவர் ஏற்கனவே ஒரு குற்றப்பதிவைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறையும் 5 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

முன்னதாக வைரலான புகைப்படத்தில், அவ்விரு ஆடவர்களும் பச்சை நிற Mazda நான்கு சக்கர வாகனத்தில் ஏறியிருந்தது தெரிந்தது.

அவ்வாகனத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரது புகைப்படங்கள் போஸ்டர்களாக வைக்கப்பட்டிருந்தன.

அதோடு பக்காத்தான் ஹராப்பான் கொடிகளும் மாமன்னரின் சொந்த மாநிலமான ஜொகூர் மாநிலக் கொடிகளும் அவ்வாகனத்தில் பறக்கவிடப்பட்டன.

அதைக் கண்ட எதிர்கட்சியினரும் நெட்டிசன்களும் அரசியல் விவகாரத்தில் ஆட்சியாளர்களை இழுப்பதா என கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் இடைத் தேர்தலில் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் ஆகிய 3R அம்சங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளை போலீஸ் மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!