குவாலா சிலாங்கூர், செப்டம்பர் 5 – 32 வயதுடைய பெண் ஒருவர் தனது 5 வயது மகளைக் கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில், நேற்று காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் அந்த பெண்ணின் முன்னாள் கணவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, காவல்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் தனது மகளின், உடல் மற்றும் கால்கள் முழுவதும் காயங்களும் வீக்கத்துடனும் இருக்கும் படம் ஒன்றை, அந்த ஆடவருக்கு சிறுமியின் பாட்டி அனுப்பியதாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்த பெண் மற்றும் அவரது காதலனால் கிள்ளப்பட்டு, வெந்நீர் ஊற்றப்பட்டுத் தாக்கியதாகவும், பாட்டியிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியதாக, அந்த ஆடவர் புகார் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அதிரடியாகக் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை தொடர்ந்து, கெடாவில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த காதலனுக்கும் காவல்துறை வலை வீசி வருகிறது.