குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட்-9, குவாலா சிலாங்கூரில் ஒரு வீட்டிலிருந்து ரொக்கம், தங்க நகைகள் என மொத்தம் 60,000 ரிங்கிட் திருடு போன சம்பவத்தில் சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
தாமான் பெண்டாஹாராவில் உள்ள தனது வீட்டில் களவுப் போனதாக புதன்கிழமைக் காலை பெண்ணொருவர் கொடுத்த தகவலை அடுத்து போலீஸ் விசாரணையில் இறங்கியது.
இதையடுத்து அவ்வட்டாரத்திலேயே வைத்து உள்ளூர் ஆடவரைக் கைதுச் செய்து, திருடியப் பொருட்களையும் போலீஸ் மீட்டதாக, குவாலா சிலாங்கூர் போலீஸ் தலைவர் மொஹமட் அம்பியா நோர்டின் (Mohd Ambia Nordin) தெரிவித்தார்.
விசாரித்ததில், அந்நபர் ஏற்கனவே திருடு – கொள்ளைக்காக பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
அந்நபரை விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட ஏதுவாக இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கிறது.