
குவாலா பிலா, ஏப்ரல்-5 – நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் மனைவியை அடித்துக் காயப்படுத்திய சந்தேகத்தில் 32 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
செவ்வாய்க் கிழமை அதிகாலை 3.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர், மனைவியைத் தாக்கியதோடு, தோள்பட்டை, கைகள் மற்றும் நெற்றியில் கடித்துள்ளார்.
காயமடைந்த மனைவி துங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவர் செய்த புகாரை அடுத்து, நேற்று மதியம் வாக்கில் அங்குள்ள மளிகைக் கடையில் சந்தேக நபர் கைதானதாக, மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தஃபா ஹுசின் கூறினார்.
அவ்வாடவர் போதைப் பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என்பது சோதனையில் உறுதியானது.
குடும்ப வன்முறையின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.