Latestமலேசியா

குவாலா பெராங்கில் நிலச்சரிவு; வீட்டுக்குள்ளிருந்த 2 சகோதரிகள் பரிதாப பலி

குவாலா பெராங், நவம்பர்-30, திரங்கானு, குவாலா பெராங், அஜிலில் (Ajil) நிலச்சரிவு ஏற்பட்டதில் வீட்டிலிருந்த பதின்ம வயது சகோதரிகள் இருவர் உயிரோடு மண்ணில் புதையுண்டனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கம்போங் புக்கிட் ஆப்பிட்டில் அத்துயரச் சம்பவம் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்கள் 16 வயது Puteri Sajidah Azman மற்றும் 13 வயது தங்கை Siti Fatimah என அடையாளம் கூறப்பட்டது.

அவர்களோடு மண்ணில் சிக்கிக் கொண்ட மற்றொருவரான 17 வயது Uzair பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.

அந்நிலச்சரிவில், மேற்கண்ட மூவரும் குடியிருந்த வீடும், கட்டுமானத்திலிருந்த மேலுமிரண்டு வீடுகளும் பாதிக்கப்பட்டன.

திடீரென பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, வீடு தரைமாட்டமாகி கிடந்தது.

காப்பாற்றுங்கள் என உதவிக் கோரி சத்தம் கேட்டாலும், அவர்கள் இருக்குமிடம் தெரியாததால் தங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறினார்.

உயிரிழந்த சகோதரிகளின் உடல்கள் சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!