குவாலா பெர்லிஸ், அக்டோபர்-19 – குவாலா பெர்லிஸில் கண்ணாடியிழை (fibre glass) படகுத் தீப்பற்றிக் கொண்டதில் இரு மீனவர்கள் தீப்புண் காயங்களுக்கு ஆளாகினர்.
அவர்களில் ஒருவருக்கு உடலில் 90 விழுக்காட்டு இடங்களில் தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.
கம்போங் தானா பாரு, மீன் துரப்பண மேடையில் வியாழக்கிழமை நள்ளிரவு அச்சம்பவம் நிகழ்ந்தது.
மீன்பிடிப்புக்காக அவ்விருவரும் கடலில் இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
மீனவர்களில் ஒருவர் பேட்டரி வைக்குமிடத்தின் மூடியைத் திறந்த போது திடீரென வெடிப்பு ஏற்பட்டு படகில் தீப்பற்றியது.
காயமடைந்த இருவரும் உடனடியாக துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.