குவாலா சிலாங்கூர், ஏப்ரல்-15, குவாலா சிலாங்கூர், ஜெராமில் ஏப்ரல்-11-ஆம் தேதி கருப்பு நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட 8 வயது சிறுமி, அதே நாளில் எவ்விதக் காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டாள்.
வீட்டில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒன்றரை மணி நேரங்களில் அச்சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதை, குவாலா சிலாங்கூர் மாவட்ட போலிஸ் துணைத் தலைவர் DSP Mohd Ambia Nordin உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், வீட்டுக்கு வெளியே விளையாடும் பிள்ளைகளை குறிப்பாக இந்த விழாக்காலத்தில் அணுக்கமாகக் கண்காணிக்குமாறு பெற்றோர்களை அவர் அறிவுறுத்தினார்.
இது போன்ற பிள்ளைக் கடத்தல் சம்பவங்கள் நிகழாதிருக்க கண்காணிப்பு அவசியம் என்றார் அவர்.
வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை எங்கிருந்தோ வந்த கருப்பு நிறக் கார் பிடித்து இழுத்து கடத்திச் சென்ற விஷயம் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.