
குவா மூசாங், நவ 11 – கிளந்தான், குவா மூசாங்கில் மேலும் ஒருவர் புலியினால் தாக்கப்பட்டதால் மரணம் அடைந்தார். இரண்டு மாதத்தில் குவா மூசாங் மாவட்டத்தில் இரண்டாவது நபர் புலியின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார்.
இந்தோனேசிய தொழிலாளி ஒருவரை புலி அடித்துக் கொன்றதை குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபோ உறுதிப்படுத்தினார். மரணம் அடைந்தவரின் கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் அவரது உடலின் பல்வேறு பாகங்கள் காணப்பட்டதாக சிக் சூன் ஃபோ தெரிவித்தார்.