குவா மூசாங், பிப் 15 – நாட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து கூடுதல் நாட்கள் தங்கியிருந்த 28 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். கிளந்தான் மாநிலத்தில் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் நடவடிக்கையின்போது அந்த சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறையின் துணை இயக்குனர்
( Nik Aktharulhaq Nik Abdul Rahman) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைத்து ஆடவர்களும் இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதின்கிழமையன்று குவா மூசாங் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 19 மற்றும் 50 வயதுடைய அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக தானா மேராவிலுள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக Nik Aktharulhaq கூறினார்.