Latestஉலகம்

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது

திருவனந்தபுரம், ஜூன் 14 – குவைத் கடலோர நகரமான மங்காஃப்பில் ( Mangaf ) உள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களில் அடையாளம் காணப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 23 தொழிலாளர்களின் உடல்களும் தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் மற்றும் கர்நாடாகவைச் சேர்ந்த ஒருவரின் உடலும் அடங்கும். அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நேற்று காலை குவைத் சென்ற மத்திய வெளியுவு இணையமைச்சர் கீர்த்திவரதன் சிங் மற்றும் இந்திய அதிகாரிகளும் அந்த ராணுவ விமானத்தில் உடன் வந்தனர்.

துக்கமடைந்த குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களின் உடலைப் பெற விமான நிலையத்தில் காத்திருப்பதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளியில் காணமுடிந்தது. விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் தனி மேசைகளில் இறந்தவரின் புகைப்படங்களுடன் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டன. குடும்பத்தினர், நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர், போலீசார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். அந்த தீவிபத்து பேரிடரை ஒரு தேசிய சோகம் என கொச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ( Pinaraye vijayan ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!