Latestமலேசியா

கூகுளுடன் இன்று ‘விர்ச்சுவல்’ சந்திப்பை நடத்துகிறார் அன்வார்

புத்ராஜெயா, மே 6 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் “ஆன்லைன்” அ;ல்லது இணைய சந்திப்பை நடத்தவுள்ளார்.

எனினும், அந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்த மேல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மலேசியா தொடர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது என மட்டும் பிரதமர் கூறியுள்ளார்.

“பொருளாதார வளர்ச்சியில் தான் நாங்கள் இப்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கு ஏற்ப வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கூடுதல் கவனத்தை நாம் பெறுவதை காண்கிறேன்,” என பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார்.

அண்மையில், மலேசியாவில் ஆயிரத்து 50 கோடி ரிங்கிட் முதலீட்டை செய்யப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதே சமயம், சவூதி அரேபியாவின், ரியாத் நகருக்கு தனது சமீபத்திய பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட அன்வார், தனது புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிறுவனத்தின் மூலம் மலேசியாவில் முதலீடு செய்ய அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாகவும் சொன்னார்.

நிலையான அரசியல் சூழல், தெளிவான தலைமைத்துவ கொள்கைகள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், மலேசியாவில் முதலீடு செய்ய செய்ய சவூதி அரேபியா முன் வந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!