
கூச்சிங் செப் 25 – கூச்சிங், ஜாலான் MJC பத்து காவாவில் இருக்கும் உணவகத்தில், வெளிநாட்டு பெண்ணை அடித்ததாக நம்பப்படும் ஆடவரைப் போலீசார் கைது செய்தனர். அவ்வாடவன் சம்பந்தப்பட்ட பெண்ணை அறைந்த காட்சி அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
அந்த பெண்ணை அடிப்பதற்கு முன்பு, கோப்பையில் இருந்த நீரை அருந்த வற்புறுத்தப்பட்டதாக புகார் ஒன்றை முகநூலில் பெற்றதாக படுவான் மாவட்ட காவல் தலைவர் DSP Lim Jaw Shyong தெரிவித்தார். புகார் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வன்முறையில் ஈடுபட்ட ஆடவனையும் அவனின் நண்பனையும் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக DSP Lim தெரிவித்தார்.