கூச்சிங்,ஆக 6- இன்று அதிகாலை சிபு பேருந்து முனையத்தில் உள்ள சரக்கு நிறுவன அலுவலகத்தின் ஓரத்தில் இருந்த பொட்டல குவியலில் வைக்கப்பட்டிருந்த விலையூர்ந்த கை தொலைபேசிகள், துணைக் கருவிகள் உட்பட பல்வேறு பொருட்கள் தீயில் அழிந்தன. பேருந்து நிலையத்திலுள்ள ஒரு பகுதியில் குப்பையில் தீப்பிடித்ததாக இன்று அதிகாலை மணி 3.17 அளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக சரவாக்கிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து பிறகுதான் , பேருந்து சரக்கு அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த பொருட்கள்தான் எரிந்திருப்பது என தெரியவந்ததாக தீயணைப்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார். தீயில் அழிந்த அந்த சரக்குப் பொருட்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் அதன் மதிப்பை கண்டறியமுடியவில்லை என அவர் கூறினார்.
Related Articles
மருந்தகத் துறை பட்டப்படிப்புக்கு 50% கல்வி உபகாரச்சம்பளம் வழங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்; இன்றே விண்ணப்பீர்!
20 hours ago
பணியிட பகடிவதையால் பெண் மருத்துவர் தற்கொலை; உடனடி நடவடிக்கை எடுக்கை செனட்டர் லிங்கேஷ்வரன் வலியுறுத்து
21 hours ago
Check Also
Close