Latestமலேசியா

கூடுதல் வசதிகளுடன் India Gate-டின் பத்தாவது கிளை PJ New Town-னில் திறப்பு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச பிரியாணி

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -14, இந்தியா கேட் (India Gate) உணவகத்தின் பத்தாவது கிளை சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா நியூ டவுனில் (PJ New Town) திறக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 170 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் விசாலமாக அது அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற கிளைகளைக் காட்டிலும் சிறப்பம்சமாக இந்த PJ New Town கிளையில் 4 பிரத்தியேக தனி சாப்பாட்டு அறை (private dining rooms) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 50 பேர் வரை தனித்தனியாக அமர்ந்து உணவருந்தலாம் என, India Gate நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சரவணன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

Hall Seating-கில் மட்டுமே 120 பேர் அமர்ந்து உணவருந்த முடியும்.

தனது வர்த்தகத் தொடக்கப் புள்ளியே PJ New Town தான் என்பதால், அங்கு புதியக் கிளையைத் திறந்திருப்பது குறித்து சரவணன் நெகிழ்ச்சித் தெரிவித்தார்.

புதியக் கிளைத் திறப்போடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக மலேசிய சாதனைப் புத்தகத்திலும் India Gate இடம் பெற்றுள்ளது.

அதாவது, ஒரே வருடத்தில் 5 லட்சத்து 70 ஆயிரம் பிரியாணிகளும், 3 லட்சத்து 70 ஆயிரம் ரொட்டி நான் (Roti Nan) விற்பனைக்காகவும் மலேசியச் சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இவ்வேளையில், வியாபார பெருக்கத்தை நோக்கமாக வைத்து இனி ஒவ்வொரு கிளைக்கும் ஹலால் சான்றிதழைப் பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சரவணன் தெரிவித்தார்.

புதியக் கிளைத் திறப்பின் சூட்டோடு சூட்டாக அடுத்த கிளைக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

வரும் டிசம்பர் வாக்கில் Bukit Bintang Changkat-டில் 11-வது கிளை அமையுமென்றார் அவர்.

இந்த PJ New Town கிளைத் திறப்பை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உணவகத் துறை பெரும் சவால் மிக்கது; எனவே அதில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் முன் அனுபவத்தோடு வருவது நல்லது என்ற ஆலோசனையையும் சரவணன் கூறியிருக்கிறார்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு முதலிடம் கொடுக்கும் வர்த்தகமே விருத்தியாகும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!