Latestமலேசியா

கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் காலமானார்

கோலாலம்பூர், ஜன 29 – கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், அரசாங்கத் தரப்பின் மூத்த வழக்கறிஞருமான டததோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் தமது 79 ஆவது வயதில் காலமானார். கடந்த இரண்டு வார காலமாக கோலாலம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்ட்டிருந்தார். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் சம்பந்தப்பட்ட 1 MDB வழக்கு விசாரணையில் அரசாங்கத் தரப்பின் வழக்கறிஞர் குழுவுக்கு கோபால் ஸ்ரீராம் தலைமையேற்றிருந்தார். மேலும் நஜீப் துனைவியார் ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்ட 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய வெளிச்சத்தின் மூலம் மின்சார வினியோக திட்டம் தொடர்பான லஞ்ச ஊழல் வழக்கிலும் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு அவர் தலைமையேற்றிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!