
கோலாலம்பூர், மார்ச் 9 – கூட்டரசு பிரதேசம் துரித வளர்ச்சி கண்டு வருவதால் அதனை நிர்வகிப்பதற்கு அமைச்சர் தேவையென கூட்டரசு பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரான காலிட் சமாட் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை அமைக்கப்பட்டபோது கூட்டரசு பிரதேசத்திற்கு அமைச்சர் தேவை என்ற கருத்தை ஏற்கனவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வலியுறுத்தியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு முந்தைய அரசாங்கத்தைவிட ஒற்றுமை அரசாங்கம் சிறிய அளவிலான அமைச்சரைவையை முய்ற்சிக்கப் போவதாக அன்வார் கூறியிருந்ததாக காலிட் சமாட் தெரிவித்தார். அவரது முயற்சிக்கு நாம் மதிப்பு கொடுப்போம் . அதே வேளையில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் லபுவான் ஆகிய கூட்டரசு பிரதேச வட்டாரங்களுக்கு ஆற்றல்மிக்க நிர்வாகம் தேவையென அவர் கூறினார்.