கோலாலம்பூர், ஆகஸ்ட் -23, கூட்டரசு பிரதேசத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 58.2 விழுக்காட்டினர் கண் பார்வை பிரச்னையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
Program Mata Hati Wilayah திட்டத்தின் கீழ் 2,077 மாணவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அது கண்டறியப்பட்டது.
அவர்களில் முதலாமாண்டில் பயிலும் ஒரு மாணவருக்கு அப்பிரச்னை கொஞ்சம் மோசமாகவே உள்ளது.
ஆனால் அது அவருக்கே தெரியவில்லையென, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சலேஹா முஸ்தாஃபா (Zaliha Mustafa) தெரிவித்தார்.
கண் பார்வைப் பாதிப்பு ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால், மாணவர்கள் கல்வியில் விடுபட்டு விடுவார்கள் என அமைச்சர் கவலைத் தெரிவித்தார்.
Program Mata Hati Wilayah திட்டமானது, கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கண் ஆரோக்கியப் பிரச்னைகளைக் களையும் நோக்கத்தைக் கொண்டதாகும்.