
கோலாலம்பூர், பிப் 2 – உபசரிப்பு துறையிலும், விமான போக்குவரத்து துறையின் தரை சார்ந்த சேவையிலும் பயிற்சியளிக்கும் திட்டத்தினை கூட்டரசு பிரதேச அறக்கட்டளை மேற்கொள்ளவிருக்கிறது.
அந்த பயிற்சி திட்டத்தினை DHS Hospitality Academy கல்வி நிலையத்துடனும், UPM பல்கலைகழகத்தின் கல்வி – பயிற்சி நிலையத்துடனும் இணைந்து மேற்கொள்ளவிருக்கிறது. அத்தரப்புகளுடன் கூட்டரசு பிரதேச அறக்கட்டளை கருத்திணக்க உடன்பாடு செய்துக் கொண்டது.
அந்த கருத்திணக்க உடன்பாட்டில், கூட்டரசு பிரதேச அறக்கட்டளையின் சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Zaizalnizam Zainun -னும் , DHS Hospitality Academy – யின் தலைமை செயல்முறை அதிகாரி Dr. S. Sri Kumar-ரும் கையெழுத்திட்டனர்.
அந்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வினை UPM பல்கலைகழகத்தின் கல்வி – பயிற்சி நிலையத்தின் நிர்வாகி Dr Kamil Yusoff பார்வையிட்டார்.
இந்த பயிற்சி திட்டத்தின் வாயிலாக 2,000 இளைஞர்கள் நன்மையடைவர். குறிப்பாக, வீடற்றவர்கள் , தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் , சிறிய குற்றங்களைப் புரிந்து தண்டிக்கப்பட்டவர்களும் இந்த பயிற்சி திட்டத்தில் இணைய முடியும்.
இத்திட்டத்தில் இணைய ஒருவர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் குடிமக்களாக இருக்க வேண்டும். அவர்களது பெற்றோர் கூட்டர பிரதேசத்தின் வாக்காளர்களாக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் 1,500-க்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்த ஓராண்டு பயிற்சித் திட்டத்தில் பங்குபெறுவர்களுக்கு 600 ரிங்கிட்டிலிருந்து 750 ரிங்கிட் வரையில் மாதாந்திர ஊக்குவிப்புத் தொகையுடன், 250 ரிங்கிட் உற்பத்தி திறனுக்கான அலவன்சும் வழங்கப்படும்.