
மாச்சாங், செப்டம்பர் 25 – தோக் போவில், கூரிய ஆயுதம் கொண்டு போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்க முயன்ற ஆடவன் ஒருவன், சுட்டுக் கொல்லப்பட்டான்.
இன்று அதிகாலை மணி நான்கு வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதுகாப்பு கருதி போலீசார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில், அந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவன் கொல்லப்பட்ட வேளை ; அவனுடன் இருந்த மற்றொரு நபர் கைதுச் செய்யப்பட்டான்.
அச்சம்பவத்துக்கு முன்னதாக, அவ்விருவரும், கம்போங் ஜோவில், மாடு ஒன்றை திருட முற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசாரின் வருகையை உணர்ந்த அவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரம் வரையில் தப்பி ஓட முற்பட்டனர். எனினும், இறுதியில் அவர்களில் ஒருவன் கூரிய ஆயுதம் கொண்டு தாக்க முற்பட்டதை தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டான்.