ஹுலு திரெங்கானு, பிப் 27 – திரெங்கானுவில் பல இடங்களில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. குறிப்பாக ஹுலு திரெங்கானு மாவட்டத்தில் இன்று காலை திடீரென ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் , பலர் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
கையில் எதையும் எடுக்கக் கூட முடியாத நிலையில், மக்கள் வீட்டின் கூரைகளின் மீது ஏறி அமர்ந்து கொண்டனர். பலர் உயரமான இடத்திற்கு சென்று உதவி வரும் வரை காத்திருக்கின்றனர்.
அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், வேகமான நீரோட்டத்தால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளன. மேலும் இன்று காலை தொடங்கி அவ்வட்டாரத்தில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.